ஜம்மு காஷ்மீரை தட்டி தூக்கிய காங்கிரஸ்

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், ஹரியானாவில், கருத்துக்கணிப்பு முடிவுகளை தவிடு பொடியாக்கி ஆளும் பாஜக 3வது முறையாக வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இதே போல ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகளின் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கிறது. அம்மாநிலத்தில் முதல்வராக உமர் அப்துல்லா தேர்வு செய்யப்படுகிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. காங்கிரஸ் – உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி ஒரு அணியாகவும், பாஜக, மெகபூபா முக்தி தலைமையிலான பிடிபி கட்சி தனியாகவும் களம் கண்டன. மும்முனை போட்டி நிலவியதால் வெற்றி யாருக்கு என சஸ்பென்ஸ் எழுந்தது.

Leave a Response