திமுக அங்கம் வகித்துள்ள இண்டி கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த மக்களவை தேர்தல் மற்றும் ஈரோடு, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் தங்களது ஆதரவை திமுக தலைமையிலான இண்டி கூட்டணிக்கு ஆதரவை கொடுத்திருந்தது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஆளும் திமுக அரசுக்கு ஏதேனும் கண்டனம், விமர்சனம் செய்தால், திமுகவை சேர்ந்தவர்களும், திமுகவின் ஆதரவாளர்களும் சில பதில்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
இதனை பட்டியலியிட்டு மக்கள் நீதி மையத்தை சேர்ந்தவரும், நடிகையுமான வினோதினி வைத்தியநாதன் தனது சமூக வலைதளக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:
“இது வரலாறு காணாத மழை.
மழை வடிய 8 மணி நேரம் ஆகும். நீங்க ஏன் 2 மணி நேரத்துல போட்டோ போடறீங்க?
எல்லா மழை நீர் வடிகால்கள் வேலையும் முழுசா முடிஞ்சிடுச்சு
மழைநீர் வடிகால் வேலை 92.6 சதவீதம் முடிஞ்சிருக்கு
ஒரு பத்து நாள் பாலில்லாம இருக்க முடியாதா
ப்ரெட்டுதான் வேணுமா
செம்பரம்பாக்கத்த பத்தி தெரியுமா
மழைநீர் வடிகால் வேலை 87.65 சதவீதம் முடிஞ்சிருக்கு
இத்தன மக்கள் ஏன் ரோட்டுல போறாங்க
வீட்டுலயே இருங்க
மஹாமஹம் தெரியுமா
பாப்ரி மஸ்ஜித் தெரியுமா
லண்டன்ல கூட மழை பேஞ்சா தண்ணி நிக்கும் தெரியுமா
ரெண்டு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம்
அஞ்சு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம்
மூணு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம்
மழைநீர் வடிகால் வேலை 91.35 சதவீதம் முடிஞ்சிருக்கு
ஸ்பெயின்ல கூட மழை பேஞ்சா தண்ணி நிக்கும் தெரியுமா
ஒரு பத்து நாள் சாப்பிடாம இருக்க முடியாதா
வயசானவங்க எதுக்கு அந்த இடத்துக்கு மழையில போனாங்க, மெட்ரோ வர்க்கு ஆறு வருஷமா நடக்குதுன்னு தெரியாதா
இது வரலாறு காணாத மழை
போட் கொஞ்சம் தாமதமாதான் வரும், பொறுங்க
உபில போயி பாருங்க, இதை விட கேவலமா இருக்கும் ரோடு
தூத்துக்குடி தெரியுமா அதுக்கு யாரு காரணம்
நீங்க இதெல்லாம் கேள்வி கேக்குறீங்க அப்போ நீங்க சங்கி
மாமா இந்த ஐடிய என்னன்னு பாத்து முடிச்சுவிடு
பொதுமக்கள் மேலையும் பொறுப்பு இருக்கு
பொதுமக்கள் தான் பொறுப்பு
பொதுமக்கள் ஏன் பொதுமக்களா இருக்காங்க – ஒரு ஆய்வு
மேயரை கேள்வி கேட்க திராணியிருக்கும் உனக்கு இதே நிதி அமைச்சரைக் கேட்க திராணி இருக்கா?
நீ சங்கி
இந்தா மாட்டு சாணி, சாப்பிடு
மழைநீர் வடிகால் வேலைகள் 95.67 சதவீதம் முடிஞ்சிருக்கு
இவனுங்களே தாழ்வான பகுதிகள்ல வீடு கட்டுவானுங்களாம் இப்போ குத்துதே குடையுதேம்பானுங்களாம்
நீ மாமி நீ இதெல்லாம் கேக்காத
நீ டயர் நக்கி நீ இதெல்லாம் கேக்காத
நீ சோம்பி நீ இதெல்லாம் கேக்காத
நீ நாயுடு நீ இதெல்லாம் கேக்காத
நீ கவுண்டர் நீ இதெல்லாம் கேக்காத
நீ ரெண்டு கை உள்ளவன் நீ இதெல்லாம் கேக்காத
பெண் அதிகாரி மேல ஆசிட் ஊத்துன வரலாறு தெரியுமா
ஒரு பத்து நாள் கரண்ட் இல்லாம இருக்க முடியாதா
வேளா வேளைக்கும் உங்களுக்கெல்லாம் சாப்பிட்டுதான் ஆகணுமா
நீ அமெரிக்கால உக்காந்துட்டு இத பத்தி பேசாத
நீங்கல்லாம் இறங்கி வேலை செய்ய வேண்டியதுதானே, வெறும் வரிகட்டிட்டு வீட்டுக்குள்ளேயே உக்காந்துப்பீங்களா
மாமா இந்த ஐடி என்னன்னு பாத்து முடிச்சுவிடு, ஓவரா பேசுது
நீ நாலு பேருகூட போனவதானே இரு உன் பழைய போட்டோலாம் போடுறோம்
இது வரலாறு காணாத மழை
சிட்னில கூட மழை பேஞ்சா தண்ணி நிக்கும்
ஆறு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம்” என்று தெரிவிதித்துள்ளார்.
https://x.com/VinodhiniUnoffl/status/1843531168156643545?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1843531168156643545%7Ctwgr%5E5f23db7ee5e9b757f605d9284276ced6d2d0f8ea%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F