கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இதில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் 3 முறை அவரே தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தை ஆட்சி செய்தார். அவரது ஆட்சி, தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியாக இருந்தது.
ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்த நிலையில், இருவருமே மறைந்துவிட்டனர். இப்போது திமுக ஆளுங்கட்சியாக இருந்து வருகிறது. வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்லை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் தனது மகன் உதயநிதியை விளையாட்டுத்துறை அமைச்சராக்கிய ஸ்டாலின், இப்போது துணை முதல்வராகவும் அறிவித்து விட்டார்.
இந்த முறை சட்டபை தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா, மீண்டும் திமுகவுக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வென்ற நிலையில், சட்டசபை தேர்தலிலும் அதே ஆதரவு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.
இந்த சூழலில், மக்கள் மத்தியில் எம்ஜிஆர், விஜயகாந்த் வரிசையில் அதிக செல்வாக்கு பெற்ற ஒரு நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி சார்பில் வருகிற சட்டசபை தேர்தலில் களத்தில் குதிக்கிறார். திமுக, அதிமுக அல்லாத புதிய மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு விஜய்தான் ஒரே சாய்ஸ் ஆக இருப்பதால் திமுகவுக்கு விஜயின் வருகை பயங்கரமாக அதிருப்தியை தந்திருக்கிறது.
இப்போது தமிழக துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதிக்கு திரையுலகம் சார்ந்த பலரும் வாழ்த்துகளை நேரிலும், தங்களது வலைதள பக்கங்களிலும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் இன்னும் வாழ்த்துகளை தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் ஆந்திராவில் துணை முதல்வரான நடிகர் பவன் கல்யாணுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், வருகிற 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தவெக எதிர்க்கப் போவதே திமுகவை தான். அப்புறம் எப்படி நாங்கள் வாழ்த்து சொல்வோம் என்று அக்கட்சியினர் கொந்தளித்து பதில் சொல்லி வருகின்றனர்.