திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட பாவத்திற்கு பரிகாரம் செய்யும் வகையில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் நோன்பு மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக பவன் கல்யாண் மற்றும் பிரகாஷ் ராஜ் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது
பவன் கல்யாண் சனாதனத்திற்கு எதிராக பேசும் நடிகர்களுக்கும் திரையுலக பிரபலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக பேசிய அவர். “நான் சனாதன தர்மத்தில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். இஸ்லாம் போன்ற பிற மதங்களிலும் இதே போன்ற பிரச்சினைகள் எழுந்தால், பரவலாக போராட்டம் நடத்தப்படும்.
என்னை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. திரையுலகினரும் மற்றவர்களும் இந்தப் பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடாது. சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நான் பேசக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியிருந்த பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ் பாடம் கற்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பவன் கல்யாணுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தெலுங்கு மொழியில் பதிவிட்டுள்ள அவர், புதிய பக்தர் இல்லையா ? இனி போதும்… மக்களுக்காக செய்ய வேண்டிய வேலைகளை பார்க்கவும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றுடன் விரதத்தை நிறைவு செய்த பவன் கல்யாண், திருமலைக்கு அலிப்பிரி மலைப்பாதை வழியாக நடந்து சென்றார். நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் திருமலைக்கு நடந்து சென்றபோது மூச்சு திணறல் ஏற்பட்டு மூச்சு விடவே பெரும் சிரமப்பட்டார். கடும் முதுகு வலியாலும் பாதிக்கப்பட்டார்.
உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்த பவன் கல்யாண், வழியிலேயே ஆங்காங்கே அமர்ந்து அமர்ந்து பயணத்தை தொடர்ந்தார். பவன் கல்யாணின் குழுவினர் அவருக்கு தண்ணீர் பாட்டீலை திறந்து கொடுத்து உதவி செய்தனர். பவன் கல்யாண் பெரும் சிரமத்திற்கு இடையில் திருமலைக்கு நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
திருமலைக்கு நடந்து செல்ல வேண்டும் என்றால் 3500 க்கும் மேற்பட்ட படிகளையும் சில செங்குத்தான பாதைகளையும் கடக்க வேண்டும். ஆஸ்துமா மற்றும் முதுகுவலி பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்படும் துணை முதல்வர் பவன் கல்யாண் பெரும் சிரமத்திற்கு நடுவில் திருமலைக்கு சென்ற வீடியோ அவரது ரசிகர்களையும் தொண்டர்களையும் பெரும் கவலையடையச் செய்துள்ளார்.
https://x.com/NewsTamilTV24x7/status/1841352486063419443?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1841352486063419443%7Ctwgr%5E6131429de48d8bfb92d100b3c8c820f699894de8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F