தேமுதிக அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என்று மாறும் : பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மரியாதை செலுத்தியுள்ளார்.

மேலும், தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை தெரிந்து வைத்த பிரேமலதா, விஜயகாந்த் பிறந்த நாள் வறுமை ஒழிப்பு தினமாகவும், அன்னதான தினமாகவும் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், இன்று முதல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் பெயர் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும் என்றும், விஜயகாந்த் பெயரின் புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில், கூட்ட நெரிசல் காரணமாக அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகபாண்டியன் மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபாப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக அங்கிருந்த தொண்டர்கள் சண்முகபாண்டியனை மீட்டு மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, தேமுதிக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துள்ளது.

மேலும் வெங்கடேசனை மின்சாரம் தாக்கிய போது காப்பாற்ற முயன்ற ஐந்து பேர், மின்சாரம் தாக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Response