நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது,
இளைஞர்களுக்கு பாதிப்பு தரும் போதை பொருட்களை விற்க மாட்டோம் என வணிகர்கள் உறுதி ஏற்க வேண்டும். போதை கலாச்சாரத்துக்கு எதிராக இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்று திரள வேண்டும். போதைப்பொருட்களால் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் மோகன் ஜி தெரிவித்ததாவது, நீங்கதான் ஆட்சியாளர் சார். யாரை ஒன்று திரள சொல்றீங்க. ஒரே கையெழுத்துல எல்லா விதமான போதை பொருள்களையும் தடை பண்ணலாம். வியாபாரத்தை தடுக்கலாம்.
நீங்க தான் ஆட்சியாளர்கள் சார்.. யாரை ஒன்று திரள சொல்றீங்க.. ஒரே கையெழுத்துல எல்லா விதமான போதை பொருளையும் தடை பண்ணலாம், வியாபாரத்தை தடுக்கலாம்.. எதுக்கு இப்படி மக்களை ஏமாத்துறீங்க?? https://t.co/l0Ffe9IOEL
— Mohan G Kshatriyan (@mohandreamer) August 11, 2024
எதுக்கு இப்படி மக்களை ஏமாத்தறீங்க? என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள பதிவு பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. சமூகவலைத்தளத்தில் பலரும் மோகன் ஜீ யின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.