மகனைக் காப்பாற்ற மகளைக் கொன்ற தாய்..- உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

மத்திய பிரதேச மாநிலம், ரேவா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பது வயது சிறுமி ஒருவர் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் சிறுமியின் குடும்பத்தார் உட்பட 50 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஒவ்வொருவரும் ஒரு விதமான பதிலை கொடுத்துள்ளனர்.

குறிப்பாக சிறுமியின் தாய் முன்னுக்குப் பின் முரணாக தெரிவித்துள்ளார். வீட்டில் உறங்கி கொண்டிருந்த சிறுமியை ஏதேனும் விஷப்பூச்சி கடித்ததால் அவர் உயிர் இழந்திருக்கலாம் என்று தெரிவித்த தாய், பின்னர் போலீசாரின் சிறப்பு விசாரணையில் பல அதிர்ச்சியான உண்மையை தெரிவித்துள்ளார்.

அதாவது சம்பவம் நடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, சிறுமியின் 13 வயதான சகோதரன் செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்து, அருகில் படுத்திருந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அடுத்து சிறுமி தனது தந்தையிடம் இது குறித்து தெரிவிப்பதாக சகோதரனிடம் தெரிவிக்கவே, இதனால் பயந்த சிறுவன், சிறுமியின் கழுத்தை பிடித்து நறுக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்த அனைத்தையும் தனது தாயிடம் தெரிவிக்கவே, தாய் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பெருத்த அவமானம் ஆகிவிடும், தனது மகனை போலீசார் பிடித்து செல்வார்கள் என்று அஞ்சி, மயங்கி கிடந்த சிறுமியை கழுத்தை நிறுத்தி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாய் மற்றும் சகோதரனை கைது செய்த போலீசார், சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வயதுகின்றன வருகின்றனர்.

Leave a Response