ரீமிக்ஸ் பாடல் காட்சியில் நடித்திருக்கும் ராகவா மற்றும் ப்ரியாபவானி

பல வெற்றி படங்களை தயாரித்த ‘5 ஸ்டார் கிரியேஷன்ஸ்’ S.கதிரேசன் தயாரித்து இயக்கும்
படம் “ருத்ரன்”. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை இப்படம் ஈர்த்துள்ளது. மேலும் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் ‘வீரத்திருமகன்’ படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்

“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Response