கட்டம் சொல்லுது – திரை விமர்சனம்

இயக்கம் – s.g.எழிலன்

நடிகர்கள் – தீபா, எழிலன்

கதை – தன் பொண்ணுக்கு திருமண தேதியை நிச்சயித்து விட்டு மாப்பிள்ளை பார்க்க ஜோசியக்காரரிடம் செல்கிறார் ஒரு தாய். அங்கு சந்திக்கும் ஒரு இளைஞன் தன் நண்பர்களின் கதையை சொல்கிறார். அந்தக்கதை இவருக்கு என்ன பாதிப்பு தருகிறது, இவர் பெண்ணுக்கு கல்யாணம் நடந்ததா ? என்பதே கதை.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க புமுகங்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள படம். தீபா மட்டுமெ கொஞ்சம் அறிமுகமான முகம். நார்மலான திரைக்கதையில் இருந்து மாறி நம் வாழ்க்கை அனுபவங்களையே திரைக்கதையாக மாற்றி சிரிக்க சிரிக்க கதை சொல்ல முயன்றிருக்கிறார்கள். அதில் பாதி ஜெயிக்கவும் செய்துள்ளார்கள்.

நான்கு இளைஞர்களும் அவர்களின் வாழ்க்கையும் தான் கதை. இது ஒன்றும் தமிழ் சினிமாவுக்கு புதிதான கதையல்ல. ஆனால் திரைக்கதையில் கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார்கள். நம் வாழ்வில் நமக்க தினமும் நடக்கும் சம்பவங்களை, இளைஞர்களை திரையில் பார்ப்பது போன்று இருப்பது படத்திற்கு மிகப்பெரும் பலம்.

திரைக்கதை ஒரு வித்தியாசமான உணர்வை தருகிறது. எளிமையான சம்பவங்கள் எதிர்பாராத திருப்பங்கள் என்பதன் மூலம் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். பல இடங்களில் அது அட்டகாசமாக ஒர்க் அவட்டும் ஆகியுள்ளது. நான்கு இளைஞர்களின் நடிப்பும், தீபாவின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் அதைத்தாண்டி நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள் அனைவரிடமும் ஒரு அமெச்சூர் நடிப்பு இருக்கிறது. அது படத்துடன் ஒட்டவில்லை படத்தை ரசிக்க விடாமல் செய்கிறது. எல்லா காட்சிகளிலும் வசனங்கள் வழவழவென இழுத்து கொண்டே செல்வது கொஞ்சம் எரிச்சல்.

இயக்குநர் திரைக்கதையில் அட்டாகசமாக உழைத்திருக்கிறார். அதை படத்தை உருவாக்கிய விதத்திலும் காட்டியிருந்தால் நன்றாக இருக்கும். மேக்கிங்கில் படம் முழுக்க அமெச்சூர் தனம் வெளிப்படையாய் தெரிகிறது.

இசை சில இடங்களில் கவர்கிறது சில இடங்களில் எரிச்சலை தருகிறது. ஒளிப்பதிவு படத்தின் பல காட்சிகளில் டிவி நாடகம் போன்ற உணர்வை தருகிறது. மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் ஒரு சிறப்பான சினிமாவை தந்திருக்கலாம்.

கட்டம் சொல்லுது இளைஞர்களின் நல்ல முயற்சி.

Leave a Response