பிறந்தநாளுக்கு தேவையில்லாத செலவு வேண்டாம் : அன்பு கட்டளையிட்ட தளபதி..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வரும் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள். அன்று மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் விஜய் தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தன்னுடைய பிறந்தநாளுக்கு தேவையில்லாத செலவுகளை தவிர்த்து வறுமையில் வாடும் மக்களுக்கு நல்லுதவி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனால் விஜய்யின் பிறந்த நாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மாஸ்டர் படத்திலிருந்து டீசர் அல்லது ட்ரெய்லர் ஏதாவது ஒன்று நிச்சயம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Response