இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா..

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. சீனாவில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் மற்ற நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,97,535 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1.47,195 பேர் குணமடைந்துள்ளனர். 8,498 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த 1,41,842 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில்,10,956 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் இந்தியாவில் வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

மாநில அளவிலான பாதிப்புகளை பொறுத்தவரை மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 97,648 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 3,590 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 46,078 பேர் குணமடைந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று வரை 38,716 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 34,687, குஜராத்தில் 22,032, உத்தர பிரதேசத்தில் 12,088, ராஜஸ்தானில் 11,838, மத்திய பிரதேசத்தில் 10,241, மேற்குவங்கத்தில் 9,768 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தெலங்கானாவில் 4,320, ஆந்திராவில் 5,429, கர்நாடகாவில் 6245, கேரளாவில் 2,244 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response