அதிகரிக்கும் கொரோனா , நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கா?

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த 5 வது கட்ட ஊரடங்கில் பல் வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையின்படி உணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி , கால் டாக்ஸி , ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து படிப்படியாக மால்கள், பெரிய அளவிலான கடைகள், மத வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு என்று தகவல் வெளியானது.

வடமாநில செய்தி நிறுவனத்தின் தலைப்பு செய்தியுடன் கூடிய ஊரடங்கு குறித்த புகைப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து மத்திய அரசு மீண்டும் ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

விமானம் மற்றும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த புகைப்படம் போலி என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது உறுதிப்படுத்தி உள்ளது.

விஷமிகள் சிலர் ஹிந்தி செய்தி நிறுவனத்தின் புகைப்படம் அதை மாற்றி வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் மத்திய அரசு ஊரடங்கு குறித்து எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. உள்நாட்டு விமான சேவை மற்றும் ரெயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Response