புழல் சிறையில் 31 பேருக்கு கொரோனா: கைதிகள் இடையே பரபரப்பு..

சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் 800 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறைக்கைதிகளில் சிலர் பயிற்சியை முடித்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த சிறைகளில் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் புழல் சிறையில் இருந்து கொரோனா பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் புழல் சிறையில் இருந்து சென்று கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களிடம் பழகிய 74 கைதிகள், 19 காவலர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்த சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன, அதில் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து 31 பேரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தேவையான மருத்துவ வசதிகள் அளித்து வருவதாகவும் புழல் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியானது கைதிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response