பிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடி நிதியுதவி செய்த பிரபல நடிகர்…

தற்போது உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் கொடூர நோய் கொரோனா. இந்த நோய் பரவுவதினால் உலகம் முழுவதும் லட்சம் கணக்கானோர் உடல்நலம் குன்றியும், உயிர் இழந்தும் உள்ளனர். இந்த நோயை ஒழிக்க உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடும் இரவும் பகலுமாக உழைத்து வருகின்றனர். இந்த நோயை ஒழிக்க இந்தியாவும் முழு முயற்சியில் இறங்கியுள்ளது. கொரோனா நோயினால் இந்தியாவிலும் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பீதியால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் வருமானமின்றி வறுமையில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாநில மற்றும் மத்திய அரசு அவர்களால் முடிந்த அளவுக்கு சில இலவசங்களை, சில நிவாரணங்களை அளிக்க முன்வந்துள்ளனர். இருப்பினும் அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

இந்த அரசின் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர்கள் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் அரசியல் பிரமுகருமான பவன் கல்யாண் பிரதமர் நிவாரணான நிதிக்கு ஆந்திர அரசு மூலமாக ரூபாய் 50 லட்சம் பிரதமர் நிவாரண நீதிக்காகவும், தெலங்கானா அரசு மூலமாக ரூபாய் 50 லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரண நீதிக்காகவும் என மொத்தம் ரூபாய் 1 கோடி பிரதமர் நிவாரண நீதிக்காகவும் வழங்கியுள்ளார்,

Leave a Response