தில்லி செல்கிறார் ரஜினி! ஏன்? எதற்காக??

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா இணைந்து நடிக்கும் திரைப்படம் “தர்பார்”. இந்த படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டம் மும்பையில் நடைபெற்றது. பிறகு இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

மும்பையில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் மூன்று நான்கு தினங்களில் சற்று அதிகமாக கூடும் என வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது. இதன் காரணமாக ‘தர்பார்’ திரைப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்னும் இரு தினங்கள் மட்டுமே மும்பையில் நடக்கவிருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு, சுமார் நான்கு அல்லது ஐந்து நாட்கள் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்படும். மீண்டும் ஜூலை முதல் வாரத்தில் ‘தர்பார்’ படத்தின் மூன்றாவது கட்ட படைப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மும்பை மழையில் படப்பிடிப்பா என்று யோசிப்பது புரிகிறது… இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பு புது தில்லியில் நடைபெற உள்ளதாம். புது தில்லியில் நடக்க போகும் இந்த படப்பிடிப்பு சுமார் பத்து நாட்கள் நடைபெறுமாம்.

தில்லியில் நடக்கும் இந்த படப்பிடிப்பு நேரத்தில் மும்பை மழை சற்று ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை மழை ஓய்ந்த பிறகு, ஜூலை மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் ‘தர்பார்’ திரைப்படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போ தெரிந்து கொண்டீர்களா, ஏன்? எதற்காக? ரஜினி தில்லி செல்கிறாரென்று…!

Leave a Response