நடிகையின் புரட்சி! நீட்டுக்கு எதிரானதா?

ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் கவதம்ராஜ் இயக்கியுள்ள படம் தான் ‘ராட்சஸி’. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய ஜோதிகா, ‘பலர் டுவிட்டரில் லேடி சமுத்திரகனி, இந்த படம் சாட்டை போல் இருக்கும், பள்ளிக்கூடம் போல் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இத்தகைய படங்கள் எவ்வளவு வந்தாலும் அதை வரவேற்கணும். பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ‘நீட்’ தேர்ச்சி விகிதம் குறைகிறது என்று சொல்கின்றனர். அரசு பள்ளிகளில் முதலில் தேவையுள்ள ஆசிரியர்களை நியமித்து, ஆசிரியர்கள் பற்றாக்குறையை தீருங்கள்.’ என்று புரட்சி வெடிக்கும் விதமாக நடிகை ஜோதிகா பேசினார். பிறகு கேள்வி பதில் நேரத்தில், நீட்டுக்கு ஜோதிகா ஆதரவா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜோதிகா, ‘நீட்’மாணவர்களுக்கு புரியும்படி நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் நீட் தேர்வை ஆதரிக்கலாம் என ஜோதிகா தெரிவித்தார்.

இப்படத்திற்கு கவுதம்ராஜ் மற்றும் பாரதி தம்பி வசனங்களை எழுத, கவுதம்ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை ஷான் ரால்டன் அமைக்க, கோகுல் பினாய் ஒளிப்பதிவினை மேற்கொள்ள, பிலோமின்ராஜ் எடிட் செய்துள்ளார்.

இப்படம் ஜூலை 5ம் தேதி அன்று உலகெங்கிலும் வெளியாகிறது.

Leave a Response