உத்தரவிட்ட தொழிலதிபர்! கடுப்பான நீதியரசர்!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 23 ஜூன் 2019 அன்று சென்னையில் அமைதியாக நடந்தது. இந்த அமைதிக்கு முழு காரணம், இந்த தேர்தலை நெறியுடன் நடத்திய தேர்தல் அதிகாரியும், ஓய்வுபெற்ற நீதியரசருமான மாண்புமிகு திரு. பத்மநாபன் தான். இந்த தேர்தலில் நாசர் தலைமைலயில், விஷால் முன்னிலையில் ‘பாண்டவார்’ அணியும், பாக்கியராஜ் தலைமையில், ஐசரி கணேஷ் முன்னிலையில் ‘சுவாமி சங்கரதாஸ்’ அணியும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று பலர் கங்கணம் கட்டினர். அதில் முக்கியமானவர் நடிகர்கள் எஸ்.வி.சேகர் மற்றும் ராதாரவி ஆவர். இவர்களை தவிர்த்து இன்னும் சிலர் மறைமுகமாகவும் நேராகவும் தேர்தலை நிறுத்த முயற்சித்து வந்தனர். இந்த முயற்சிகள் இருந்தாலும் சற்றும் தளராமல் தேர்தல் பிரச்சாரத்தில் நாசர் அணியினரும், பாக்கியராஜ் அணியினரும் முழு மூச்சாக செயல்பட்டு வந்தனர். சுவாமி சங்கரதாஸ் அணிக்குள் பெயருக்கு தான் பாக்யராஜ் அணி என்று சொல்ல வேண்டும், காரணம் பாக்கியராஜ் இந்த தேர்தலில் போட்டியிட மனு சமர்ப்பித்த ஒரு நாள் முன்பு தான் இந்த அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்றால் இது ஐசரி கணேஷ் தலைமையிலான அணி என்று தாராளமாக சொல்லலாம்.

உத்தரவிட்ட தொழிலதிபர்! கடுப்பான நீதியரசர்!!… என்னடா இன்னும் தலைப்புக்கான செய்திக்கே வரவில்லையே என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. ஐசரி கணேஷ் அணியினர் பிரச்சாரத்தில் முழுவீச்சாக இருந்தார்கள் என்று தானே நினைத்தோம், அது தான் இல்லையாம்! இந்த தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு தர மறுத்ததால், நடிகர் சங்கம் சார்பாக அதன் பொது செயலாளர் விஷால் நீதிமன்றத்தை நாடி, தேர்தலுக்கு பாதுகாப்பு கோரினர்.

இந்த வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி திரு. ஆனந்த வெங்கடேஷ், விஷாலின் நடிகர் சங்கம் சார்பான கோரிக்கையை ஏற்று தேர்தலுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதே நேரத்தில் ஒரு பெரிய குண்டை போட்டு உடைத்தார் அந்த நீதிபதி. அதாவது, இந்த வழக்கில் ஐசரி கணேஷுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்க திரு. அனந்தராமன் என்பவர் அணுகினார் என்றார். இதன் காரணமாக அனந்த ராமன் மற்றும் ஐசரி கணேஷ் மீது நீதிமன்றம் தானாகவே(Suo-moto) வழக்கு தொடுக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

அந்த சுமோட்டோ வழக்கில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்புகள் பற்றி பாப்போம்:
1. நீதிபதி தன்னுடைய காரில் வேலூரிலிருந்து சென்னை நோக்கி அண்ணா பல்கலை கழகம் அருகில் வந்துகொண்டிருந்த போது ஒரு கைபேசியிலிருந்து தன்னுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்ததாம். அந்த அழைப்பில் எதிரில் பேசியவர் திரு அனந்தராமன் என்பதும், இந்த நீதியரசருக்கு தெரிந்தவர் என்றும் தெரிவித்தார். அந்த அழைப்பில் பேசிய அனந்தராமன், “இந்த வழக்கை ஐசரி கணேஷ் அவர்கள் சுமார் இரு வாரங்கள் தள்ளி போடா கேட்டுக்கொண்டார்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த அனந்தராமனின் வியாபாரத்திற்கு ஐசரி கணேஷ் பல நேரங்களில் பண உதவி நிறைய செய்துள்ளதாகவும், “அதற்க்கு பிரதிபலனாக இந்த வழக்கை நீங்கள் எனக்காக இரு வாரங்களுக்கு தள்ளி வையுங்கள்” என கேட்டுள்ளாராம். கடுப்பான நீதிபதி, அந்த கைபேசி அழைப்பை துண்டித்துள்ளார். வீட்டிற்கு வந்தது சேர்ந்தவுடன், அங்கு பார்த்தல் ஊடகவியலாளர்கள் பலர் அவருடைய இல்லத்தில் கூடியிருந்தனர். அவருடைய வீட்டுக்குள் செல்லலாம் என்று பார்த்தல், அங்கு இருந்தாராம் இந்த அனந்தராமன். அது மட்டுமின்றி, அனந்தராமன் கைபேசி வாயிலாக ஐசரி கணேஷ் தன்னை தொடர்புகொண்டார் எனவும் அந்த வழக்கு மனுவில் தெரிவித்துள்ளார் நீதியரசர்.

2. அனந்தராமன் தனக்கு தெரிந்த நபராக இருந்தாலும், அவர் என்னுடைய நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

3. நீதிபதி தான் குறிப்பிட்டுள்ள சில காரணங்களுக்காக ஏன் ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமனை தண்டிக்க கூடாது

4. ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன் நான்கு வாரத்திற்குள் இந்த நீதி மன்றத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்

நீதிபதியின் இந்த உத்தரவுகளை பார்க்கும்போது, ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன், நான்கு வாரத்திற்குள் அவர்களுடைய விளக்கத்தை கொடுக்கவில்லை என்றால் இவர்கள் இருவரும் கைது செய்யப்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் சொல்கின்றனர்.

நாங்கள் போட்ட தலைப்புக்கு, இப்போ பதில் சொல்லிட்டோமா????

Leave a Response