ஜோதிமுருகன் இயக்கத்தில் 4 ஹீரோயின்கள் நடிக்கும் “கண்டதை படிக்காதே”..!

ராதாமோகன், சிம்புதேவன், வேலு பிரபாகரன் ஆகிய பிரபல டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த ஜோதிமுருகன், `கபடம்’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார். அடுத்து இவர், `கண்டதை படிக்காதே’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார்.

“கபடம்” படத்தை மிகவும் சிறிய பட்ஜெட்டில் இயக்கினார் 2014-ல் ரிலீஸான அந்த படத்தை டிஜிட்டல் Platform ஆனா “அமேசான்” நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை விட அதிக விலை கொடுத்து வாங்கியது.தான் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான “கண்டதை படிக்காதே” படமும் டிஜிட்டல் Platform ஆனா “அமேசான்” உடன் பேச்சுவார்தை நடந்துகொண்டுடிருக்கிறது.

“கண்டதை படிக்காதே” படம் பற்றி கூறுகையில்

இது ஒரு ஹை கான்செப்ட் ஸ்டோரி லைனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களை ஹாலிவுட்டில் ஹை கான்செப்ட் திரைப்படம் என்று அழைப்பார்கள் இந்த மாதிரியான படங்களில் எந்த நடிகர் நடித்தாலும் படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும். அதே மாதிரி இந்த படமும் ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சமான திரைப்பமாக இருக்கும். படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை படம் கவர்ந்துவிடும் படத்தின் இறுதிக் காட்சி வரையிலும் சஸ்பென்ஸ் இருந்துக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டுகின்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறினார்.

படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கிறார் இவர் தமிழில் “பயமறியான்” “கபடம்” ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார், திருப்பாச்சி புகழ் “பான்பராக் ரவி ஆர்யான்” வில்லனாக நடித்திருக்கிறார், சண்டைக் காட்சிகளில் ஆதித்யாவும் பான்பராக் ரவி ஆர்யானும் உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார்கள்.

“சபிதா ஆனந்த்” முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் படப்பிடிப்பு தளத்தில் “சபிதா ஆனந்த்” தன் வாழ்நாளில் இப்படி ஒரு அற்புதமான கேரக்டரில் முதல் தடவையாக தான் நடிப்பதாக கூறினார்,படத்தின் தயாரிப்பாளரூம் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

“பிரீத்தி” “சுஜி “வைஷாலி” “ஜென்னி” என நான்கு ஹீரோயின்கள் இதில் நடித்திருக்கிறார்கள் மற்றும் “நவீன்” “சீனு” “மணிமாறன்” “நாகராஜ்” போன்ற சினிமா பட்டாளமே நடித்திருக்கிறது.

ஒளிப்பதிவு “மகிபாலன்” இசை “செல்வா ஜானகிராஜ்” எடிட்டிங் “சுரேஷ் அர்ஸ்” ஸ்டன்ட் “ஆக்ஷன் பிரகாஷ்” கலை “முனி கிருஷ்ணா” ஓலி வடிவமைப்பு தரணிபதி”, பாடல்கள் “ரவிதாஸ்” எழுத இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் இயக்குனர் “ஜோதி முருகன்”,

படப்பிடிப்பு கொடைக்கானல், ஊட்டி, சென்னை, ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டடுள்ளது.

Leave a Response