மரங்கள் நட்டு நடைபாதையை ஆக்ரமித்த வனத்துறை அதிகாரி… அதிகார துஷ்பிரயோகமா..!?

ஊரே பத்தி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்னு ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க…

அந்த மாதிரி ஊரே தண்ணிப் பஞ்சத்துல சிக்கி தவிக்குது. மழையும் இல்ல. வெயிலும் கொளுத்தி மாளுது. மனுஷனுக்கே தண்ணி இல்லாம தவிக்கும் போது மரம் செடி எல்லாம் எங்க நட்டு வளக்குறது…

ரொம்ப ஆதங்கப் பட வேணா… சென்னையில இருக்கும் ஒரு வனத்துறை அதிகாரி Dr.H. மலேஷப்பா தனக்கு சொந்தமான இடத்தை சுற்றி ஆளுயரத்துக்கு காம்பவுண்ட் கட்டி ரக்‌ஷா யோகா செண்டருக்கு வாடகைக்கு விட்டிருக்காரு… அந்த இடத்தை சுத்தி இரண்டு பக்கமும் நடைபாதைய மொதல்ல சிமெண்ட் போட்டு ஆக்ரமிச்சார்…

என்னன்னு கேட்டவங்கிட்ட யோகா செண்ட்டருக்கு வர்றவங்க எடுத்து வரும் டூ வீலர்ர், கார்களை நிறுத்திக்க வசதியா இருக்கும்னு விளக்கம் சொன்னார்.

சில மாதங்கள் போனதும் இப்ப சத்தமில்லாமல் தன் அதிகாரத்தை பயன்படுத்தி வனத்துறைக்கு சொந்தமான மரச் செடிகளை அரசு வாகனத்தில் எடுத்து வந்து ஏற்கனவே சிமெண்ட் போட்டு வாகன நிறுத்தத்திற்கு ஆக்ரமித்த இடத்தை சுற்றி 5 அடிக்கு ஒன்றாக நட்டு ஆளுயர கம்பி வலையையும் நிறுவி விட்டார்.

இப்ப போய் என்னங்க இப்படி மரச்செடி நட்டால் நாளைக்கு வளர்ந்தால் மேலே போகும் கரண்ட் கம்பிகளில் பட்டு விபத்து ஏற்படாதா என்றால் அதற்கு சரியான பதில் இல்லை.

அதோடு தனது காம்பவுண்ட் பக்கத்தில் வாகனங்களை நிறுத்தாமல் இருப்பதற்காக இப்படி மரச்செடி நட்டார்களாம்.

ஒரு வனத்துறை அதிகாரி எத்தனை சரியாக திட்டமிட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசுக்கு சொந்தமான நடைபாதையை ஆக்ரமித்து அதற்கு ஒரு காரணமும் சொல்கிறார் பாருங்கள்.

மரச் செடிகள் நட்ட இடத்துக்கு கீழே மழை நீர் கால்வாய் போகிறது. மேலே கரண்ட் ஒயர்கள் போகிறது அப்படி இருந்தும் அரசு நிலத்தை ஆக்ரமிக்க
அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்ற இது போன்ற அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்.

சென்னை முழுக்க தண்ணீர் பஞ்சம் நிலவும் நிலையில் தனது அதிகாரத்திற்கு கீழே உள்ள ஒரு வாகனத்தை தண்ணீர் கேனுடன் அனுப்பி தன் இடத்தில் நடைபாதையை ஆக்ரமித்து நட்ட மரச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகிறார்.

இப்போது கட்டுரையின் முதல் பாராவை மீண்டும் படிக்கவும்.

Leave a Response