காற்றின் மொழி திரை விமர்சனம்…

மருமகள் என்றாலே அவர்களுக்கு முதல் டென்சன் மாமியாரும், நாத்தனார்களும் என்று தான் பெரும்பாலானோர் சொல்லுவர், காரணம் அப்பிடி ஒரு கெடுப்புடி இருக்கும். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் நாயகியாக இருப்பவர் ஜோதிகா. இவருடைய கணவர் விதார்த் ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சூபார்வைசராக பணியாற்றுபவர். இவருக்கோ வேலை பளு அதிகம். இவர்களுக்கு பள்ளியில் பயிலும் ஒரு 11 வயது மகன். இது தான் அவர்கள் குடும்பம்.

என்னடா மருமகளை ஆட்டிப்படைக்க மாமியார், நாத்தனார் இல்லையா?…என்பது தான் உங்களின் மனத்தில் ஓரத்தில் இருக்கும் கேள்வி என்று தெரிகிறது. அதற்கு பதில் தான் ஜோதிகாவின் அப்பாவாக மோகன்ராம், மூத்த சகோதரிகளாக இரட்டையர்கள். இவர்கள் போதும்… மாமியார் மற்றும் நாத்தனார் பஞ்சாயத்துக்கு இங்கு இடமில்லை!

சரி கதையோடு ஒன்லைன் என்னனு பார்ப்போம்! +2 படிப்பில் தோல்வியடைந்தவள் தான் இந்த ஜோதிகா. இதன் காரணமாக அவரை அவ்வப்போது மோகன்ராமும், சகோதரிகளும் ஜோதிகாவை கிண்டல் செய்வதும், அதுவே அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உணர்வு. தான் எப்படியாவது சாதனை புரியவேண்டும், தொழில் ஆரம்பித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற ஒரு ஆதங்கம் அவரிடம் தோன்றும்.

இப்படி இருக்கும் சூழலில் தான் ஜோதிகா எப்.எம்’யில் நடக்கக்கூடிய ஒரு போட்டியில் பங்குபெற்று வெல்கிறார், அங்கே ஆர்.ஜே’வாக பணியில் சேருகிறார். இதற்கப்புறம் குடும்பம், ஆர்.ஜே பணி, விதார்த் என பயணிக்கிற கதையில் என்ன நிகழ்கிறது என்பது தான் மீதி கதை.

ஜோதிகாவின் சுட்டித்தனம் படத்துக்கு எப்போதும்போல ஒரு ப்ளஸ் தான். கண்ணை சுருக்கி பார்த்து சொல்லும் பதிலில், ஆடியன்ஸின் சென்டிமெண்டை எப்போதுபோல் இதிலும் ஸ்கொர் செயகிறார் ஜோதிகா. தனியார் கம்பெனிகளில் வேலைக்கு செல்லும் கணவர்கள் அவர்கள் படும் பாடு, அந்த வேலை பலுவில் குடும்பத்தில் அவர்கள் எவ்வாறு பயணிக்கிறார்கள் என்பதை பற்றி நன்றாக நடித்து காட்டியிருக்கிறார் விதார்த்.

எப்.எம் ரேடியோவில் ஸ்டேஷன் ஹெட்டாக பணியாற்றும் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவு என்றே சொல்லலாம். லட்சுமி மஞ்சுவுக்கு படம் முழுக்க ஒரு நல்ல கதாபாத்திரத்தை இயக்குனர் ராதா மோகன் அமைத்து கொடுத்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

லட்சுமி மஞ்சு தன்னுடைய கதாபாத்திரத்தை அவருக்கு என்று ஸ்பெஷலாக உள்ள ஹஸ்கி வாய்ஸில் சொந்த குரலில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே எப்.எம் ரேடியோ நிலையத்தில் லட்சுமி மஞ்சுவுடன் பணியாற்றும் குமரவேல் எப்போதும் போல் பிசிறு தட்டாமல் தன்னுடைய இயல்பான நடிப்பில் அசத்துகிறார்.

மளிகை கடை உரிமையாளராக வரும் மயில்சாமி ஒரு குறிப்பிட்ட காட்சியில் சில நிமிடங்கள் ஆடியன்ஸை திடர் சிரிப்பு மழையில் நனைய வைக்கிறார். பாராட்டுக்கள் மயில்சாமி…

மற்றப்படி படத்தில் நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, உமா ஐயர், சிந்து ஷாம், சான்றா எமி பிரஜின் ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அளவோடு செய்துள்ளனர். புதுமுக சிறுவன் தேஜஸ் கிருஷ்ணா(நடிகர் ஷாம் & நடிகை சிந்து ஷாமின் மகன்) தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு. தேஜஸ் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் நல்லாவே ஸ்கொர் செய்துள்ளார் என குறிப்பிட்டு சொல்லலாம்.

சிம்பு சிறப்பு தோற்றம் படத்தில் ஒன்றும் ப்ளஸ்ஸாக தெரியவில்லை. யோகி பாபுவின் சிறப்பு தோற்றம் ஆடியன்ஸை அந்த காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

‘காற்றின் மொழி’ வித்யா பாலன் ஹிந்தியில் நடித்த ஒரிஜினல் படத்தின் தமிழ் ரீமேக்காக இருந்தாலும், தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்றார் போல் வசனங்களை எழுதி எம்.ஆர்.போன் பார்த்திபன் வசனங்கள் நச். மகேஷ் முத்துசாமியின் ஒளிஓவியம் அருமை. தேவையான காட்சிகளை மட்டும் வைத்துவிட்டு, தேவையற்ற காட்சிகள் என சிலவற்றை பார்வையிட்டு கத்திரி போட்ட எடிட்டர் கே.எல்.பிரவீன் ஆஸ் யூஷுயல் திறமையான எடிட்டர் நான் என செய்து காட்டிவிட்டார். மதன் கார்க்கி பாடல்கள் படத்துக்கு ஒரு ப்ளஸ். அதிலும் ‘கிளம்பிட்டாலே விஜயலட்சுமி’ மற்றும் ‘டர்ட்டி பொண்டாட்டி’ பாடல்கள் சூப்பர். இந்த பாடல்களுக்கும், படத்தின் பின்னணிக்கும் இசை அமைத்த ஏ.எச்.காஷிபுக்கு ஒரு ‘ஓ’ போட்டே தீரனும். காஷிப் இசை படத்துக்கு ஒரு கூடுதல் பலம் என்றே சொல்லலாம்.

ஜோதிகா’வின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘காற்றின் மொழி’ இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மீண்டும் பெண்களை தலைதூக்கி நிறுத்தும் மற்றும் ஒரு தரமான திரைப்படம்.

அனைத்து வயதினரும் குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய ஒரு தரமான திரைப்படம் தான் இந்த ‘காற்றின் மொழி’. மொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

1 Comment

Leave a Response