போலீஸ் உடையில் மாஸ் காட்டும் ஜோதிகா : வெளியானது ஜாக்பாட் படத்தின் ஃபஸ்ட் லுக்..!

சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் 11 வது படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டது. குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜாக்பாட்” இப்படத்தில் ஜோதிகா, ரேவதியுடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசை. ஆனந்தகுமார் – ஒளிப்பதிவாளர். மற்றும் விஜய் வேலுக்குட்டி எடிட்டர். முழு ஷூட்டிங்கும் 35 நாட்களில் முடிந்துவிட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜோதிகாவின் முதல் லுக் வெளியாகி உள்ளது.

இப்படம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைந்த காமெடி படமாக உருவாகியுள்ளது.

 

Leave a Response