சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் – அனிருத் இணையும் #SK17 : லைகா நிறுவனம் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது இயக்குனர் ரவிகுமார் மற்றும் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ஆகியோர் இயக்கி வரும் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் 17வது படமாக அமையும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். முதல்முறையாக லைகா, சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் ஆகியோர் இணையும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு வெளியாகும் என லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Response