எதிர்க்கட்சி கூட்டணி பிளவுபட்ட கூட்டணி : ராகுலை சீண்டும் தமிழிசை..!

எதிர்க்கட்சி கூட்டணி பிளவுபட்ட கூட்டணி என்று பாஜக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பேட்டியளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரிய கூட்டணி அமைக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ், திமுக, தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற உள்ளது.

இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் என்று இரண்டு நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில் இதுகுறித்து பாஜக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பேட்டியளித்தார்.

அதில் எதிர்கட்சி கூட்டணி பிளவுபட்ட கூட்டணி. அந்த கூட்டணி உருவாகும் முன்பே பிரச்சனையை சந்தித்து இருக்கிறது.

கூட்டணி முழுதாக உருவாகுமா என்பதே சந்தேகம்தான். 2019 தேர்தலில் பாஜகதான் மீண்டும் வெற்றி பெறும். பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமராக ஆட்சி அமைப்பார்.

அரசியலுக்காக ராகுல் காந்தி மத சாயம் பூசுகிறார். அரசியல் சமயத்தில் மட்டும் ராகுல் கோவிலுக்கு செல்கிறார். அவரை மக்கள் நம்ப மாட்டார்கள்.

5 மாநில சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. எதிர்க்கட்சிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பயப்படுகிறது. ராகுலை வேட்பாளராக அறிவித்தால் அந்த கூட்டணியால் வெல்ல முடியாது, என்றுள்ளார்.

Leave a Response