நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ஹெச்.வசந்தகுமார் இன்று ராஜினாமா செய்தார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ஹெச்.வசந்தகுமார் இன்று ராஜிநாமா செய்தார்.
இதற்கான கடிதத்தை பேரவைத் தலைவர் தனபாலிடம் இன்று அவர் அளித்தார். ஒரு உறுப்பினர் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது. ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒருவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால், இரண்டில் ஒரு பதவியை ராஜிநாமா செய்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்குநேரி தொகுதிக்கு என்னென்ன செய்ய முடியுமோ, அதை நான் செய்துள்ளேன். ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.