மோடியின் ஆட்சியில் நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது – ராகுல் காந்தி..!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இன்று அவர் தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

முன்னதாக கண்ணூரில் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது, மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இப்போது 3 முக்கிய பிரச்சனைகள் நாட்டை பாதித்துள்ளது. முதலாவது பாதிப்பு பொருளாதார சீர்குலைவாகும்.

2-வது நாட்டின் முதுகெலும்புகளாக கருதப்படும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு.விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததும், விவசாயிகளை இந்த அரசு புறக்கணித்ததும் ஒரு காரணமாகும்.

3-வதாக நாட்டில் நடந்த மிகப்பெரும் ஊழல்கள். அம்பானி குடும்பத்தினருக்கு மக்களின் வரிப்பணத்தில் கொள்ளையடித்து கொடுக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் கோடி பணம் இதற்கு ஒரு உதாரணமாகும்.

Leave a Response