பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 150 தொகுதிதான் ? ப.சிதம்பரம் கருத்தால் பரபரப்பு..!

வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 150 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தற்போது காங்கிரஸ் 12 மாநிலங்களில் வலுவாக உள்ளதாகவும், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையை விட வரும் தேர்தலில் 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ராகுல்காந்தியை முன்னிறுத்தி கூட்டணியை கவனமாக அமைத்தால் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கலாம் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இருப்பினும் அகில இந்திய அளவில் 544 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 150 இடங்களை மட்டுமே பிடிக்கும் என ப.சிதம்பரம் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ், பாராளுமன்ற தேர்தல், ராகுல்காந்தி, ப.சிதம்பரம்

Leave a Response