தமிழ்ச் சினிமாவில் வலம் வரவிருக்கும் அடல்ட் ஒன்லி ‘ஏ’ திரைப்படம் ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’.
இந்தப் படத்தை சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் பிரபல கன்னட நடிகையும், தயாரிப்பாளருமான சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடித்துள்ளார்.
மேலும், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகை பூர்ணாவும் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன், இசை – நடராஜன் சங்கரன், பாடல்கள் – விவேகா, கலை இயக்கம் – வைரபாலன், நடன இயக்கம் – கந்தாஸ், சண்டை இயக்கம் – ரமேஷ்., படத் தொகுப்பு – தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி, தயாரிப்பு நிர்வாகம் – பி.ஆர்.ஜெயராமன், தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண், திரைக்கதை, வசனம், இயக்கம் – A.R.முகேஷ்.
இந்தப் படத்தில் சன்னி லியோனின் உறவு முறையில் சகோதரியும், ஹாலிவுட் நடிகையுமான மியா ராய் லியோன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.
ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவருடையதுதானாம். அந்தப் பெயரைக் காப்பாற்றும் விதமாக இந்தப் படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளாராம் மியா ராய் லியோன்.