சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிபோய் கொண்டிருந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு படம் ஜூன் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் களவாணி. அமைதியாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ருசித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தயாராகி வருகிறது.
முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே இயக்க விமல், ஓவியா ஆகியோர் இதிலும் கதை மாந்தர்களாக நடிக்கிறார்கள்.
இதற்கிடையில் நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்திருப்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக அண்மையில் வெளியாகியிருந்தது.