காஞ்சனா-3 ட்ரெய்லர் : வயதான தோற்றத்தில் மிரட்டும் ராகவா லாரன்ஸ்..!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் முனி, காஞ்சனா ,காஞ்சனா 2, ஆகிய படங்கள் உருவாகியிருந்த நிலையில், தற்போது காஞ்சனா 3 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி அணைத்து தர மக்களையும் கவர்ந்துள்ளது.

இப்படத்தில் ஓவியா, வேதிகா ஆகியோர் நடித்து உள்ளனர். பேய் படங்களையும் திகிலோடு சேர்த்து காமெடி கலந்து திரைக்கதை அமைத்து அதனை மக்கள் ரசிக்கும் படி அமைத்து ஹிட்டாக்குவதில் ட்ரெண்ட் செட்டராக இருப்பவர் நடிகர் – இயக்குனர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பு இயக்கத்தில் முனி, காஞ்சனா, காஞ்சனா-2, ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமாக காஞ்சனா – 3 (முனி-4) தயாராகி உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லர் முழுவதும் வயதான தோற்றத்தில் மிரட்டி உள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

Leave a Response