சபரிமலை விவகாரம் : கமலை வம்புக்கு இழுக்கும் எஸ்.வி.சேகர்..!

தற்போது நாடு முழுவதும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் விவகாரம் சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

இந்த விவகாரம் தொடர்பாக ஆதரவும், எதிர்ப்பும் வலுத்துவரும் நிலையில், அரசியல் பிரமுகர்கள், சினிமா, பிரபலங்கள் என பலதரப்பட்டவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், தனக்கு சபரிமலை நடைமுறைகள் குறித்து தெரியாது, நான் சபரிமலைக்கு சென்றதும் இல்லை என தெரிவித்தார்.

எனவே, தன்னிடம் இதுகுறித்து கருத்து கேட்பது சரியாக இருக்காது என ஜகா வாங்கினார் கமல்ஹாசன்.

இதனிடையே, சர்ச்சை கருத்துகளுக்கு பேர் போன பாஜகவைச் சேர்ந்தவரும், நடிகருமான கமலின் கருத்தை கிண்டலடிக்கும் விதமாக, கமலஹாசன் நடித்த தசவதாரம் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

எஸ்.வி.சேகரின் இந்த பதிவுக்கு ஆதரவு கருத்துகளும், எதிர்ப்பு கருத்துகளும் கிளம்பியுள்ளன.

Leave a Response