முறைகேடான அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்-பட்டையை கிளப்பும் டி.டி.வி..!

முறைகேடான அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என டி.டி.வி. தினகரன் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.

தமிழக அரசியல் அடுத்த கட்ட நகர்விற்கு தயாராகிவிட்டது. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது.

முதல் ஆளாக, திருப்பரங்குன்றத்திலும், திருவாரூரில் நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார் டிடிவி தினகரன். இந்த நிலையில் மதுரை சென்ற அமமுக கட்சியினர் நிறுவனர் டிடிவி தினகரன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டியில்:

தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு அதிகரித்து வருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக உள்ளார். மின்வெட்டு இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். மின்வெட்டிற்கு காரணம் சரியான ஆட்சி இல்லாததுதான்.

தமிழக அரசில் ஊழல் அதிகரித்துள்ளது. தொடர் ரெய்டுகள் மூலமே இது அம்பலம் ஆகியுள்ளது. முகாத்திரம் இல்லாமல் முதல்வரின் உறவினரை உயர் நீதிமன்றம் விசாரிக்க சொல்லாது. ஆர்.கே நகரில் அதிமுக தோல்வியடைந்ததால் 20 ரூபாய் சிஸ்டம் குறித்து ஆளும் கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர். அடுத்த தேர்தலிலும் அவர்கள் தோற்பார்கள்.

இடைத்தேர்தல் எல்லாம் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்த தேர்தலில் அமமுக கட்சியே வெற்றி பெறும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க அ.ம.மு.க. தயாராக உள்ளது. இதில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் பெரிய தோல்வியை சந்திக்கும். இடைத்தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

குருட்டு அதிர்ஷ்டத்தில் கிடைத்த ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். அதை வைத்துதான் கொள்ளை அடிக்கிறார். முறைகேடான அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார்.

Leave a Response