ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், படம் பார்ப்போரின் கண்களை மட்டுமின்றி, படம் பார்க்கும் அனுபவத்தையும் குளிர குளிர குளிர்ச்சியாக வைத்து இருப்பார். அவரது எண்ணம் போலவே அவரது காட்சி அமைப்பும் வண்ண மயமாக இருக்கும்.அவரது கடுமையான நேர்த்தியான உழைப்பு சீமராஜா படம் எங்கும் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. சீமராஜா தனக்கு பெரும் சவாலாக இருந்ததாக கூறுகிறார் பாலசுப்ரமணியம். “எனது முந்தைய படங்களை விட இந்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நிறைய மெனக்கெட்டேன்.
பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில்., இமான் இசையில், என இந்த கூட்டணியில் வருத்த படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் கிராமிய பின்னணியில் உருவான படங்கள் என்பதால் இந்த வித்தியாசம் தேவைப்பட்டது. அதே பிண்ணனி என்றாலும், காட்சி அமைப்பு மிக மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று உழைத்தோம். இயக்குநர் பொன்ராம், கலை இயக்குனர் முத்துராஜ், என ஒவ்வொருவரும் போட்டி போட்டு உழைத்தோம். இந்த படத்தில் உள்ள நடிகர்கள் தங்களது அனுபவத்தின் அடிப்படையில் ஓளி அமைப்புக்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு தந்தனர்.
சிவகார்திகேயன், சமந்தா, சூரி , சிம்ரன், நெப்போலியன் சார், லால் சார் என குவிந்து இருந்த நட்சத்திர குவியல் படத்துக்கு பெரிய அந்தஸ்தை பெற்று தந்து இருக்கிறது. படத்தை குறிப்பிட்ட காலத்தில் , சிறந்த தரத்தில் வழங்க வேண்டும் என்பதால் மிகுந்த உடல் களைப்பு மட்டுமின்றி, மன களைப்பு கூட இருந்தது.
ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் இடைவிடாத உற்சாகம் எங்களுக்கு உத்வேகமும், உற்சாகமும் தந்தது. 24 A M ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரிப்பில் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி வெளிவரும் “சீமராஜா” எங்கள் உழைப்புக்கு பெரும் அந்தஸ்தை பெற்று தரும்”என உறுதி பட கூறினார் பாலசுப்ரமணியம்.