ராணுவ ஹெலிகாப்டர் விவகாரம்: பதிலளிக்க மறுத்த நிர்மலா சீதாராமன்..!

ஓ.பன்னீர்செல்வம் தம்பிக்காக விதிகளை மீறி ராணுவ ஹெலிகாப்டர் கொடுத்து உதவியது ஏன் என்பது பற்றி பதிலளிக்க பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டர். உடல்நலம் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகனை மதுரையில் இருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து வர ராணுவ ஹெலிகாப்டரை நிர்மலா சீதாராமன் அனுப்பி வைத்தது சர்ச்சை வெடித்தது.

இதுபற்றி பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர்கள் சந்திப்பின் போது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த அவர் ராணுவ ஹெலிகாப்டரை தனிநபருக்கு கொடுத்து உதவியது பற்றி கேள்விக்கு பதிலளிக்காமல் மௌனம் காத்தார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலாவின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகனுக்காக ஜூலை 1-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டரை நிர்மலா சீதாராமன் கொடுத்து உதவினார்.

ரகசியமாக நடந்த இந்த நிகழ்வை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அம்பலப்படுத்தினார். ரகசியமாக செய்த உதவியை ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக கூறியதால் கோபமடைந்த நிர்மலா அவரை சந்திக்காமல் திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Response