சசிகலாவிடம் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சிறையில் விசாரணை..!

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் இன்றும் நாளையும் வருமானவரித்துறை அதிகாரிகள் சிறையில் விசாரணை நடத்த உள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்ற ஆண்டு சசிகலாவுக்கு சம்பந்தப்பட்ட 180 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளனர். அதை ஒட்டி அவர்கள் இன்றும் நாளையும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Response