சென்னை திரும்பும் ரஜினிகாந்த்-காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியை சந்திப்பாரா..!

படப்பிடிப்பு முடிந்து இன்றோ… நாளையோ சென்னை திரும்பும் ரஜினி, காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியை சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 4 நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட திரையுலக பிரபலங்கள் அனைவரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.

ஆனால் ரஜினிகாந்த், வட இந்தியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் மட்டும் நேரில் வந்து விசாரிக்கவில்லை. இருப்பினும் அவர் தொலைபேசியில் அவ்வப்போது கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு முடிவடைகிறது. இதைடுத்து ரஜினிகாந்த் இன்றோ, நாளையோ சென்னை திரும்பவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிப்பார் என்று தெரிய வந்துள்ளது.

 

Leave a Response