நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக பாஜக அரசுக்கு எதிராக கருத்துகளை பகிர்ந்து வருகிறார். பாஜக அமைச்சர்கள், மோடி உள்பட அனைவரையும் விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் மறக்க முடியுமா தூத்துக்குடியை என்ற தலைப்பில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தும் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் பேசப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், நாட்டை பயத்திலும் பதற்றத்திலும் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசுகளின் நோக்கம்.
தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச வேண்டும். நான் அரசியலில்தான் இருக்கிறேன். ஆனால் இவர்களை போல் தேர்தல் அரசியலில் இல்லை. கேள்வி கேட்பது நம் உரிமை என்றார் அவர்.