மாநில சுயாட்சிக்கு எதிராக ஏவப்படும் அனைத்து வன்முறைகளையும் தொடர்ந்து திமுக கண்டிக்கும்-ஸ்டாலின்..!

மாநில சுயாட்சிக்கு எதிராக ஏவப்படும் அனைத்து வன்முறைகளையும் தொடர்ந்து திமுக கண்டிக்கும். எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்யச் சென்ற ஆளுநருக்குக் கருப்புக்கொடி காட்டிய வழக்கில், திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மாநில சுயாட்சிக்கு எதிராய் எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஆளுநரின் அத்துமீறல்களை தொடர்ந்து கண்டிக்கும் தி.மு.க கழகம், தனது அடிப்படை கொள்கையான மாநில சுயாட்சியை அடையும் வரை எவ்வித போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் தயாராக இருக்கும். இதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response