தமிழ் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படகின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. மேலும் விஜயின் பிறந்த நாளை ரசிகர்களுக்கு ஆரவாரத்துடன் பிரம்மாண்டமாக கொண்டாடி வந்தனர்.
மேலும் ரசிகர்கள் பலர் விஜயின் பிறந்த நாளுக்காக ஒட்டிய போஸ்டரில் அவரை அரசியலுக்கு அழைத்தும் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்நிலையில் தற்போது தமிழகத்தின் கூட்டுறவு துறை அமைச்சரான செல்லூர் ராஜு அளித்த பேட்டி ஒன்றில் விஜயை கிண்டலடித்து பேசியுள்ளார்.
அதாவது நாலு படம் நல்லா ஓடிட்டா உடனே முதல்வரா? இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் அவர்களை ஏற்று கொள்வதா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.