‘2.0’ முதல் நாளிலேயே சும்மா அதிரவைக்கும் வசூல்..!

ஏற்கனவே வந்த எல்லா படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து, வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது ரஜினியின் 2.0 திரைப்படம்.

உலகம் முழுவதும் நேற்று வெளியான 2.0 திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வழக்கம் போல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே படத்தை பாராட்டி வருகின்றனர்.

சுமார் 550 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இப்படம், வசூலில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ரிலீசான பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனையை நிகழ்த்தியது 2.0. படம் ரிலீசான நேற்று ஒரு நாளில் மட்டும், சென்னையில் ரூ.2.64 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது 2.0. இது சர்கார், மெர்சல், விவேகம், காலா ஆகிய படங்களைவிட அதிகம்.

2.0 திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. இது அனைத்தையும் கணக்கிட்டால் முதல் நாள் வசூல் பல கோடிகளை தாண்டும் என்கின்றனர் சினிமா துறையினர். தோராயமாக 60 முதல் 65 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கக் கூடும் என கணக்கிடுகின்றனர்.

 

Leave a Response