18 முன்னாள் எம்.எல்.ஏ-க்களுடன் தினகரன் பெங்களூர் பயணம் : நடந்தது என்ன..!

18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகு தான் மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்றும் இடைத்தேர்தலை சந்திப்பதாகவும் தினகரன் கூறியிருந்தார்.

இதனையடுத்து பெங்களூரில் பரப்பன அக்கிரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் சசிகலாவை இன்று அவரது உறவினர் தினகரன் மற்றும் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 முன்னாள் எம்.எல்.ஏக்களும் சந்தித்தனர்.

அதன் பின் பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன் கூறியதாவது:

மேல் முறியீடு வேண்டாம் என நாங்கள் எடுத்தமுடிவு சரி என்றும். வருகிற இடைத்தேர்தலை சந்திப்பதுதான் நல்லது. தைரியமுடன் போட்டியிடுங்கள் இவ்வாறு சசிகலா கூறியதாக தினகரன் தெரிவித்தார்.மேலும் சர்கார் படத்தில் மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பது அநாகரிகமானது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response