சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகலாம் என்பது சிறந்த மூடநம்பிக்கை- ராமதாஸ்..!

சிறந்த மூடநம்பிக்கை என்பது சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிடலாம் என்பதுதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டி ஸ்ரீரங்கம் கோவிலில் சுக்கிரபுத்திர யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதை ராமதாஸ் இருவேறு டுவீட்களில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில் நெற்றியில் வைத்த மஞ்சள் பொட்டை அழித்து விட்டால், கோயிலுக்குள் நடத்திய சுக்கிரபுத்திரி யாகத்துக்கு பலன் கிடைக்குமா… கிடைக்காதா? பகுத்தறிவுவாதிகள் பதில் சொன்னால் பரவாயில்லை!.

இதைத் தொடர்ந்து மற்றொரு டுவீட்டில் அவர் கூறுகையில் கண்ணாடியை திருப்பி வைத்தால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்ற அஜித் பட நகைச்சுவைக்கு அடுத்தப்படியாக, ஆகச் சிறந்த மூட நம்பிக்கை என்பது சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்பது தான்! என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response