யாரை வேண்டுமானாலும் கமல் சந்திக்கலாம் : அது அவரது உரிமை-அமைச்சர் ஜெயக்குமார்..!

அடிப்படை கட்டமைப்பு வசதி இருந்தால்தான் ஒரு மாநிலம் முழுமையாக வளர்ச்சி பெற முடியும் என்றும், யாரை வேண்டுமானாலும் கமல் சந்திக்கலாம்… அது அவரது உரிமை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை, பட்டினப்பாக்கத்தில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகா உகந்தது. உடலைப் பேணிக்காப்பதற்கு யோகா அவசியம் என்றார்.

நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அடிப்படை கட்டமைப்பு வசதி என்பது மிக மிக முக்கியம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அடிப்படை கட்டமைப்பு வசதி பெற்றதாக உள்ளது. சென்னை இ.சி.ஆர். சாலை ஒரு காலத்தில் ஒரு வழிச்சாலையாக இருந்தது. இதனால் விபத்துகள் 100 சதவீதமாக இருந்தது. ஆனால், சாலை  அகலப்படுத்தப்பட்டதையொட்டி விபத்துகள் குறைந்தன தற்போது 5 சதவீதமாகவே விபத்துகள் உள்ளது. சாலைகள் பாதுகாப்புக்குரியதாக இருக்கப்பட வேண்டும். சாலைகள் அகலப்படுத்தப்படுவதால்தான் விபத்துகள் குறைகின்றன. அதற்கு இ.சி.ஆர். சாலை பெரியஉதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

சேலம் – சென்னை 8 வழிச்சாலை தமிழக வளர்ச்சிக்கு உதவும். மக்களின் வளர்ச்சிக்காகவே திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசாங்கத்தின் நன்மைக்காக எந்தவொரு திட்டமும் போடப்படவில்லை. மக்களுக்கு பிரச்சனை இருந்த மாவட்ட நிர்வாகத்தில் தெரிவிக்கலாம். உடல் உறுப்பு தான முறைகேடு தொடர்பாகவிசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல் ஹாசன், சோனியா காந்தியை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கமல்ஹாசனைப்பொறுத்தவரை யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அது அவரது உரிமை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தென்கொரிய அதிபர் கிம் ஜாங்-ஐசந்திக்கலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Leave a Response