போலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த நடிகை நிலானிக்கு 15 நாள் காவல்-சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..!

நடிகை நிலானியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை போலீஸ் உடையில் விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார் நடிகை நிலானி.

தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டததை கண்டித்து போலீஸ் உடையை அணியவே உடம்பு கூசுவதாக தெரிவித்திருந்தார் நிலானி. அவரது வீடியோ பெருமளவில் வைரலானது. இதைத்தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை வடபழனி போலீசார் நேற்று குன்னூரில் அவரை கைது செய்தனர்.

நேற்று குன்னூர் மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தப்பட்ட நிலானி இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நிலானியை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நடிகை நிலானியை ஜூலை 5 ஆம் தேதி வரை காவலில் வைக்க சைதப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே நிலானி தாக்கல் செய்த ஜாமீன் மனு வரம் 25ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Response