பெட்ரோல், டீசல் விலை உயர்வு : லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்..!

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது.

இந்த வருட தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.24, டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54 என விற்கப்படுகிறது.

இது மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக யாரும் இன்னும் போராட்டம் செய்ய தொடங்காத நிலையில் தற்போது மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவது லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் செய்ய தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். டீசல் விலை உயர்வை கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்றுள்ளனர். இதனால் நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் 5 லட்சம் லாரி உரிமையாளர்கள் வேலை வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மருந்து, பால் மற்றும் தண்ணீர் லாரிகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Response