பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சாலையை மறித்து போராட்டம் செய்வோம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் தியாகராசன் தலைமைத் தாங்கினார். இதில், துணைத் தலைவர் கண்ணன், மாவட்டப் பொருளாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கினார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் நாகராஜன் வரவேற்றார்.
இதில், “டீசல் விலையை குறைக்க வேண்டும், டிசல் மீதான் வாட் வரியை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் 18% வரி விதிப்புடன் க்குள் கொண்டுவர வேண்டும், இந்தியா முழுவதும் பெட்ரோ, டீசல் விலை ஒரே சீரானதாக நிர்ணயிக்க வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும், உரிமம் முடிந்த பின்னரும் இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்,
உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டு விலையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் கடந்த 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது,
மத்திய, மாநில அரசுகள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற லாரி உரிமையாளர்களை அழைத்து பேசுவது,
அப்படி பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் லாரி உரிமையாளர்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது” என்று தீர்மானிக்கப்பட்டது.