பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்-தமிழிசை..!

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுக்க இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், இந்தியாவில் பந்த் நடத்த காங்கிரஸ் கட்சிக்கு எந்த உரிமையும் இல்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் காங்கிரஸ் தான். அவர்கள் இப்படி உயர்வதற்கு காரணம்.

நாட்டில் பந்த் நடத்த எந்த உரிமையும் எதிர்கட்சிளுக்கு இல்லை. இந்தியாவில் ஊழல் மட்டுமே விதைத்து சென்றது காங்கிரஸ் கட்சி. அதனால் அதுவே விலை ஏற்றத்திற்கு காரணம். மோடி தலைமையிலான அரசு விரைவில் விலையை குறைக்கும்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க மாநில அரசுகள்தான் முன்வர வேண்டும். அதை செய்தால் விலை வெகுவாக குறையும். அதேபோல் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும். இதற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளித்தால்தான் நடக்கும்.

திமுக தேவையில்லாமல் முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Response