காவிரி பங்கீடு விவகாரம் : பிரதமர் மோடியை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி..!

காவிரி பங்கீடு தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று சந்திக்க உள்ளார்.

தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 35,000 கனஅடியாக உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் முறைப்படி நீதிமன்ற உத்தரவை பின்பற்றி இன்னும் காவிரி வாரியம் அமைக்கப்படவில்லை.

காவிரி வாரிய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும் கூட, கர்நாடக அதன் உறுப்பினர்களை அறிவிக்காமல் உள்ளது. இதனால் இன்னும் வாரியம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. நேற்று நிதி ஆயோக் கூட்டத்தில் வாரியம் அமைக்க தமிழக முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். விரைந்து உறுப்பினர்களை அறிவிக்க வேண்டும் என்றார்.

இந்த நிலையில் காவிரி பங்கீடு தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று சந்திக்க உள்ளார். காவிரி வாரியம் முழுமையாக அமைக்கப்படாத நிலையில் குமாரசாமி பிரதமரை சந்திக்கிறார். காவிரி விவகாரத்தில் சில முக்கியமான விஷயங்களை அவர் பேச வாய்ப்புள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு, மோடியை குமாரசாமி சந்திக்கிறார்.

Leave a Response