காலா ரிலீஸாவதை விட காவிரி தான் முக்கியம் – கர்நாடகாவில் கமல்ஹாசன் பேச்சு.!

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் என இருவருமே தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர். காவிரி விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

காவிரி விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் கர்நாடகாவில் அவரது படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இதனால் கர்நாடகாவில் காலா ரிலீஸாவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த கமல்ஹாசனும் குமாரசாமியும் இரு மாநிலங்களிலும் விவசாயிகள் உள்ளனர். இதனால் இது குறித்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தனர்.

பின்னர் கமல்ஹாசன் இந்த சந்திப்பில் நான் காலா படத்தை பற்றி பேசவில்லை. திரைப்படங்கள் ரிலீஸாவதை விட மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது தான் முக்கியம் என கூறியுள்ளார். இது கூட்டணிக்கான சந்திப்பு கிடையாது. மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக பேச வந்துள்ளேன்.

Leave a Response