தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக 12 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக தமிழக மக்கள் மேடை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று முதல் மூன்று நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.