மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட வேண்டும், முடக்க வேண்டும்-வைகோ காட்டம்..!

காவிரிப் பிரச்சனையில் முக்கிய கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காவிரி உரிமையை இழந்து விட்டால் தமிழகத்திற்கு பெரும் கேடு ஏற்படும் எனக் கூறியுள்ளார்.

முன்னாதாக,காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அசைக் கண்டித்தும் வீர விளையாட்டு மீட்புக் கழகத்தினர் திருச்சியில் காவிரி ஆற்றில் ஒரு நாள் தண்ணீர் அருந்தாப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயளாலர் வைகோ பேசினார்.

அப்போது அவர் பேசியதிலிருந்து…

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பு ஓரவஞ்சனையானது. கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் தான் செய்வார்கள்

நமக்கான நியாயத்தைப் பெற ரயில் மறியல், சாலை மறியல் செய்வதால் எந்த பயனும் இல்லை. கடையடைப்பால் நமக்குதான் இழப்பு. மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட வேண்டும், முடக்க வேண்டும் அப்போதுதான் நமது உரிமைகளை பெற முடியும்

மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்க மாட்டார்கள். அமைத்தாலும் அதிகாரம் இல்லாத அமைப்பாகவே இருக்கும். இது, கர்நாடக தேர்தலுக்காக இல்லை, தமிழ்நாட்டை வஞ்சிக்கவே மத்திய அரசு இவ்வாறு செய்கிறது.

தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் வறட்சியை ஏற்படுத்தி, எரிவாயு எடுப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுப்புத் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிடுவதாக சொல்லியுள்ளது. மாற்று இடம் தமிழ்நாட்டில் எங்கும் கொடுக்க கூடாது.

காவிரி உரிமையைப் பெற இளைஞர்கள், மாணவர்கள் போராட்ட களத்திற்கு வர வேண்டும். அவர்கள் போராட்டத்திற்கு வந்தால் தான் போராட்டத்திற்கு உயிர்ப்பு இருக்கும். தீக்குளிப்பு, உயிரிழப்பு வேண்டாம்

என வைகோ கூறினார்.

Leave a Response